×

இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளுக்கு வீட்டு வாடகைப்படி நிர்ணயம்: அரசு உத்தரவு

சென்னை: தலைமை செயலாளர் இறையன்பு, கருவூலம் மற்றும் கணக்குத்துறை ஆணையருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: 7வது சம்பள கமிஷனின் அடிப்படையில் மாநகராட்சி மற்றும் டவுன் பகுதிகளில் வரையறையின் படி x பிரிவில் அடிப்படை ஊதியத்தில்  வாடகை படி 24 சதவீதம், y பிரிவில் 16 சதவீதம், z பிரிவில் 8 சதவீதமாகவும் இருந்தது. இதைத்தொடர்ந்து, அகில இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளின் வாடகைப்படி 27 சதவீதம், 18 சதவீதம், 9 சதவீதமாக நிர்ணயம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தநிலையில், மாநிலத்தில் பணியாற்றும் அகில இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளுக்கு இந்த வீட்டு வாடகைப்படி ஜனவரி 1ம் தேதியில் இருந்து நடைமுறைப்படுத்தப்படுகிறது.
கடந்த 2017ம் ஆண்டு வீட்டு வாடகைப்படி நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. 5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வீட்டு வாடகைப்படி மாற்றி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Housing Rent for Indian Civil Servants: Government Order
× RELATED கொளத்தூர் தொகுதி பெரியார் நகரில் ₹110...